Sunday, September 27, 2009

Nice story..!

எழுத்தாளர் ஒருவர், ஜென் ஞானியிடம் கேட்டார்:
"ஞானமடைந்துவிட்டால் ஒருவருடைய எல்லா பிரச்னைகளுமே தீர்ந்துவிடுமா? அவரின் எல்லா குறைகளுமே நிறைகளாகிவிடுமா?''

அப்போது அவரிடம், ``எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடவேண்டும் என்பது நிஜத்திற்கு ஒத்துவராத பேராசை. எல்லா குறைகளும் நிறைகளாகிவிடவேண்டும் என்பதும் உண்மைக்கு ஒத்துப்போகாத கோரிக்கை'' என்று ஞானி சொன்னதும்,

"ஞானமடைந்தாலும் எந்தப் பிரச்னையும் சரியாகாதா?'' என்று எழுத்தாளர் ஆச்சரியமாய் கேட்டார்.

அதற்கு ஜென் ஞானி மிக அழகாய் பதில் சொன்னார்....
"பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை. எல்லாம் நிறைவாய் இருந்தால் முட்டாள்கூட ராஜாவாயிருக்க முடியும். எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை"

No comments: